அப்படி சொன்னால் செருப்பால் அடிப்பேன் - பவன் கல்யாண் காட்டம்!

Pawan Kalyan Andhra Pradesh
By Sumathi Oct 19, 2022 04:41 AM GMT
Report

தன்னை விமர்சித்தால் செருப்பால் அடிப்பேன் என ஆளுங்கட்சியினருக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 பவன் கல்யாண்

நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமானவர் பவன் கல்யாண். ஆந்திரா, அமராவதி அடுத்த மங்களகிரியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடையே பவன் கல்யாண் உரையாற்றினார்.

அப்படி சொன்னால் செருப்பால் அடிப்பேன் - பவன் கல்யாண் காட்டம்! | Pawan Kalyan Warns Ysrcp Andhra

அப்போது திடீரென்று தன்னுடைய காலில் அணிந்திருந்த செருப்பை உயர்த்தி காட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பிட்டு மற்ற கட்சிகளிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பேக்கேஜ் அடிப்படையில் கட்சி நடத்துகிறேன் என்பவர்களை செருப்பால் அடிப்பேன்.

கொந்தளிப்பு

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி குண்டர்களே என்னுடைய பொறுமையின் காரணமாக நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள் என்றும் மேலும் பல்வேறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரை எச்சரிக்கும் வகையில் பவன் கல்யாண் ஆவேசமாக பேசினார்.

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.