நடிகை பூனம் கவுரை ஏமாற்றினாரா நடிகர் பவன் கல்யாண்? ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! கொதிக்கும் ட்விட்டர்!

Pawan Kalyan Poonam Kaur Justice for Punjabi girl
By Anupriyamkumaresan Sep 28, 2021 10:23 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

ட்விட்டரில் தெலுங்கு திரையுலகம் பற்றி எரிகிறது. #JusticeforPunjabiGirl என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சமீபத்தில் ரிபப்ளிக் பட ப்ரோமோஷன் விழாவில் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் இந்நிகழ்வில் பேச போகிறார் என்ற செய்திகள் வந்ததில் இருந்தே தெலுங்கு சினிமா உலகிற்கு பதற்றம் பற்றிக்கொண்டது.

நடிகை பூனம் கவுரை ஏமாற்றினாரா நடிகர் பவன் கல்யாண்? ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! கொதிக்கும் ட்விட்டர்! | Poonam Kaur Pawan Kalyan Issue Trending

ஏனெனில் அவர் கடைசியாக வக்கீல் சாப் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் தான் பேசினார். அதில் அவர் பேசிய பேச்சு தெலங்கானா முதலமைச்சரை எரிச்சலடைய செய்தது. அதனை தொடர்ந்து ஒரு பழைய சட்டத்தை எடுத்து வந்து அமல்படுத்தி வக்கீல் சாப் திரைப்படத்தின் ரிலீஸில் சிக்கல் உண்டாக்கினார்.

அப்போது இயற்றிய சட்டம் அவரை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்த திரைப்பட இன்டஸ்ட்ரியையும் பாதித்தது. அந்த பாதிப்பில் இருந்து மீளாத தெலுங்கு சினிமா, இன்னமும் அந்த இன்னல்களை அனுபவித்து வருகிறது.

நடிகை பூனம் கவுரை ஏமாற்றினாரா நடிகர் பவன் கல்யாண்? ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! கொதிக்கும் ட்விட்டர்! | Poonam Kaur Pawan Kalyan Issue Trending

பெரிய திரைப்படங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்குவதில்லை. இந்நிலையில், வக்கீல் சாப் ஆடியோ லாஞ்ச்சுக்குப் பிறகு தற்போதுதான் மேடையில் முதன் முறையாக பேசி இருக்கிறார். தெலுங்கு திரையுலகமே பவன் கல்யாண் என்ன பேசப்போகிறார்? முதலமைச்சர் பற்றி எதுவும் பேசிவிடுவாரா? பேசி அதனால் நிலைமை இன்னும் மோசமாகுமோ என்ற அச்சம் நிலவி வந்தது.

ஆனால் ரிபப்ளிக் விழாவில் ஆளும் அரசை பெரிய அளவில் விமர்சிக்காத பவன், தெலங்கானா போலீசாரை மட்டுமே குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பவனுக்கு எதிராக பேசிய நடிகர் கிருஷ்ண முரளி, பவன் கல்யாண் உண்மையான தலைவர் என்றால், தெலுங்கில் உச்சத்தில் உள்ள நடிகர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட பஞ்சாப் பெண்ணுக்கு அவர் நியாயம் பெற்று தர வேண்டுமென்று தெரிவித்தார்.

இந்த தகவலே இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகை பூணம் கவுரின் தொடக்கக்காலத்தில் அவர் ஏமாற்றப்பட்டதாகவும், அவரை ஏமாற்றிய நடிகரே பவன் கல்யாண்தான் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை பூனம் கவுரை ஏமாற்றினாரா நடிகர் பவன் கல்யாண்? ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! கொதிக்கும் ட்விட்டர்! | Poonam Kaur Pawan Kalyan Issue Trending

அதனை மறைமுகமாக தெரிவிக்கவே கிருஷ்ண முரளி அவ்வாறு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு பவனின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இது அரசியல் ரீதியிலான எதிர்ப்பு எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தால் தெலுங்கு திரையுலகம் பரபரப்பாக காணப்படுகிறது.