நான் வேலை மட்டும் பார்க்குறேன்...எம்.எல்.ஏ சம்பளம் கூட வேண்டாம் - அதிரடி காட்டும் பவன் கல்யாண்!!
நடைபெற்று முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
வெற்றி
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 21 சட்டமன்ற தொகுதிகளிலும், 2 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது ஜன சேனா கட்சி.
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், மாநிலத்தின் துணை முதல்வராக பவன் கல்யாண் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தான், பவன் கல்யாண் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சம்பளம் வேண்டாம்
அதாவது ஆந்திர மாநிலத்தின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கும் சூழலில் தனக்கு எம்.எல்.ஏ சம்பளம் வேண்டாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாயத்து ராஜ் துறைக்கு அமைச்சராக அவர் பதவியேற்றிருக்கும் நிலையில், போதுமான நிதி இருக்கை அரசிடம் இல்லாத காரணத்தால், அமைச்சர் அலுவலக மறுசீரமைப்பு மற்றும் சம்பளம் போன்றவற்றை வேண்டாம் என அவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.