திருமலைக்கு நடந்தே சென்ற பவன் கல்யாண்; மூச்சு திணறலால் பாதிப்பு - அதிர்ச்சி வீடியோ!
பவன் கல்யாண், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளார்.
பவன் கல்யாண்
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில், விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக புகார் எழுந்து பெரும் சர்ச்சையாக வெடித்தது.
கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் இது நடந்ததாக, தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இதை உறுதி செய்து, திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
விரதம் நிறைவு
திருப்பதி கோவிலுக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கும் வகையில், 11 நாட்கள் விரதமிருந்து ஏழுமலையானை தரிசிக்கப் போவதாக துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் அறிவித்திருந்தார். அதன்படி, விரதத்தை நிறைவு செய்து தன் மகள்கள் ஆத்யா மற்றும் பலினி அஞ்சனி ஆகியோருடன் அவர் திருப்பதிக்கு சென்றார்.
Hon'ble Deputy Chief Minister, Sri @PawanKalyan's younger daughter, Polena Anjani Konidela, has given a declaration for darshan of Tirumala Sri Venkateswara Swamy. She signed the declaration forms given by TTD (Tirumala Tirupati Devasthanams) officials. Since Polena Anjani is a… pic.twitter.com/FLOQv8CpHB
— JanaSena Party (@JanaSenaParty) October 2, 2024
அப்போது அலிபிரி மலைப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்ட அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், சிறிது நேரம் அமர்ந்தபடியே திருமலை சென்றடைந்தார்.
ஆஸ்துமா மற்றும் முதுகுவலி பிரச்சினைகள் இருப்பதாகக் கூறப்படும் பவன் கல்யாண் பெரும் சிரமத்திற்கு நடுவில் திருமலைக்கு சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.