100 முறை யோசித்து பேசுங்கள்; எச்சரித்த பவன் கல்யாண் - மன்னிப்பு கேட்ட கார்த்தி
திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
திருப்பதி லட்டு
கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றி கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வில் உறுதியானது.
இந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க கோவிலில், மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் தவம் இருப்பதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
கார்த்தி பேச்சு
இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க கோவிலில், மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 நாட்கள் தவம் இருப்பதாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் நடித்து செப்டம்பர் 27 ஆம் தேதி திரைக்கு வர உள்ள சத்யம் சுந்தரம்(தமிழில் 'மெய்யழகன்') பட ப்ரோமோஷன் நிகழ்வில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.
[
விழா மேடையில் சிறுத்தை படத்தில் லட்டு தின்ன ஆசையா என்ற காட்சி ஒளிபரப்பட்டபோது, லட்டு வேண்டுமா என கார்த்தியிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய கார்த்தி, லட்டு விவகாரம் சென்சிடிவ் விஷயம் இதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என பேசினார்.
பவன் கல்யாண்
கார்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், "சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க (sensitive) விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் பற்றி பேசும் போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்." என பேசினார்.
இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், "பவன் கல்யாண் ஐயா, உங்கள் மீது பெரும் மரியாதை உள்ளது, எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை கடைபிடிப்பேன்" என தெரிவித்துள்ளார்.
[
கார்த்தி தவறாக எதுவும் பேசவில்லையே என தமிழ் ரசிகர்கள் நடிகர் கார்த்திக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்..