இது கங்கை நதியா இல்லை கடற்கரையா? அரைகுறை ஆடையில் ஆட்டம்போட்ட வெளிநாட்டினர்!
புனித நதியான கங்கையில் வெளிநாட்டினர் நீராடு மகிழும் வீடியோ வெளியாகியுள்ளது.
கங்கை நதி
புனித நதி இந்து மதத்தினர்கள் மிக புனிதமாக கருதும் விஷயங்களில் கங்கை நதியும் ஒன்று. நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும், வாழ்வில் ஒரு முறையாவது கங்கையில் நீராட ஆசை இருக்கும்.அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மக்கள் நதியில் நீராடி வருகிறார்கள்.
கங்கையில் நீராடினால் பாவங்கள் கழியும், என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் பிகினி உடையில் வெளிநாட்டினர் நீராடுவது போன்ற வீடியே இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹிமாலயன் இந்து என்ற நபரின் இணையத்தளபி பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று தற்போது பெரும் பேசுபொருளமாக மாறியுள்ளது.
வெளிநாட்டினர்
அதுமட்டுமல்லாமல் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பதிவில், "புனித கங்கையை கோவா கடற்கரையாக மாற்றிய புஷ்கர் தாமிக்கு முதலமைச்சர் நன்றி. இப்படிப்பட்ட நிகழ்வுகள் இப்போது ரிஷிகேஷில் நடக்கின்றன.
விரைவில் இந்த நகரம் மினி பாங்காக் ஆகிவிடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு வீடியோவில், ரிஷிகேஷ் நகரம் இப்போது மதம், ஆன்மிகம் மற்றும் யோகாவின் நகரமாக இல்லை. கோவா போன்று ஆகிவிட்டது.
ரிஷிகேஷில் ஏன் இதுபோன்ற போதை விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் ஜாம்பி கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது? புனிதபூமி என்பது இதுதானா? இந்த புனித நகரத்தை அவர்கள் அழிக்கும் முன் ஏதாவது செய்ய வேண்டும்" இவ்வாறு முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமியை சாடியுள்ளார்.
இந்த இரண்டு வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.