ஒரே இடத்தில் குளிர்ந்த ஆறும், வெந்நீரும் - மர்மம் நிறைந்த சிவன் கோவில்

Himachal Pradesh
By Sumathi Mar 24, 2023 05:51 AM GMT
Report

உறையும் குளிர்ந்த நீரும் மறுபுறம் கொதிக்கும் வெந்நீர் ஊற்றுமாக மர்மம் நீடித்து வருகிறது.

மணிகரன்

கடல் மட்டத்திலிருந்து 2650 மீட்டர் அல்லது 7956 அடி உயரத்தில் அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் மணிகரன் நகரில் அமைந்துள்ளது சிவன் ஆலயம். இது மற்ற கோவில்களை விட நிச்சயம் வினோத கதைகளையும் அமைப்புகளையும் கொண்டுள்ளது.

ஒரே இடத்தில் குளிர்ந்த ஆறும், வெந்நீரும் - மர்மம் நிறைந்த சிவன் கோவில் | Manikaran Cold River And Hotspring In Same Place

பார்வதி நதி உறையும் குளிர்ந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும் இடத்தை ஒட்டியே ஒரு வெந்நீர் ஊற்று எப்போதும் கொதிக்கும் நீரை உமிழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த கொதிக்கும் நீரூற்றுகள் சிலநேரத்தில் 10 முதல் 15 அடி உயர நீருற்றை உருவாக்குகிறது. வெவ்வேறு நீருற்றுகளின் வெப்பநிலை 65 முதல் 80 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும்.

விலகாத மர்மம்

சீக்கிய சமூகத்திற்கும் இது முக்கியமான தலமாக உள்ளது. சீக்கிய குருவான குருநானக் தங்கி தியானம் செய்த இடமாக இந்த இடம் குறிப்பிடப்படுகிறது. அதனால் சிவன் - பார்வதி கோவிலுக்கு அருகிலேயே சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா அமைந்துள்ளது. இரண்டு கோவில்களுக்கும் பாலம் ஒன்றும் உள்ளது.

ஒரே இடத்தில் குளிர்ந்த ஆறும், வெந்நீரும் - மர்மம் நிறைந்த சிவன் கோவில் | Manikaran Cold River And Hotspring In Same Place

இந்த 2 கோவில்களுக்கும் இந்த வெந்நீர் ஊற்றில் தான் பிரசாதம் சமைக்கப்படுகிறது. அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை இந்த நீரில் சமைத்து பரிமாறுகின்றனர். தண்ணீரில் நேரடியாக பாத்திரத்தை வைத்து சமைக்கலாம் அந்தளவு சில நேரம் சூடாக இருக்கும் இந்த சமையல் சுவையாக இருக்கும்.

இந்த வெந்நீர் ஊற்றில் நிராடுவதால் மூட்டுவலி மற்றும் பிற நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. குலு அல்லது மணாலியில் இருந்து இந்த இடத்தை எளிதில் அடையலாம். சண்டிகர் ரயில் நிலையதில் இருந்து டாக்சி எடுத்துக் கொள்ளலாம். மணாலியில் இருந்து செல்ல ரூ. 700 டாக்சி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.