சொத்துக்காக தான் இந்த திருமணம்..60 வயது நடிகரை மணந்த 45 வயது நடிகை!! முன்னாள் கணவர் விமர்சனம்
பிரபல தெலுங்கு நடிகர் நரேஷ் - நடிகை பவித்ரா லோகேஷ் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம்
தெலுங்கில் பிரபலமாக இருந்த 70-களின் நாயகர்களில் ஒருவர் கிருஷ்ணா. இவரின் மகன் தான் தற்போதைய தெலுங்கு திரைப்பட சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு. கிருஷ்ணாவின் மற்றொரு மகன் நரேஷ். இவரும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராகவே திகழ்கிறார்.
துணை நடிகராக உச்சத்தில் இருக்கும் இவர், கடந்த ஆண்டில் பிரபல தெலுங்கு நடிகையான பவித்ரா லோகேஷை திருமணம் செய்து கொண்டார். இது நரேஷின் 4-வது திருமணமாம். பவித்ரா லோகேஷ் ஒரு கட்டத்தில் நாயகியாக இருந்து தற்போது அம்மா ரோல்களில் பிரபலமாக நடித்து வருகிறார்.
விமர்சனம்
இவர்களின் திருமணத்தை குறித்து பவித்ரா லோகேஷின் முன்னாள் கணவர் சுசேந்திர பிரசாத் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறாள், அதற்காக எதையும் செய்வாள் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பவித்ரா லோகேஷை சந்தர்ப்பவாதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 45 வயதாகும் பவித்ரா லோகேஷ் வரும் விமர்சனங்களை எல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு அவரது வாழக்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விஷேசங்க மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் "கூகுல் குட்டப்பா" படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.