கல்யாணமாகல..ஆனா உலகெங்கும் 100 குழந்தைகள்! புடின் எதிரியான கோடிஸ்வரரின் வினோத கதை!!
பிரபல தொழிலதிபர் ஒருவர் தனக்கு 100 குழந்தைகள் உள்ளதாக அறிவித்து பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Pavel Durov
ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் Pavel Durov. இவர் தான் நாம் இன்று அதிகமாக பயனப்டுத்தும் சமூகவலைத்தளங்களில் ஒன்றான Telegram'ஐ உருவாக்கியவர். அது மட்டுமின்றி இவர் ரஷ்யாவின் பேஸ்புக் எனப்படும் செயலியையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
39 வயதாகும் Pavel Durov'இன் சொத்து மதிப்பு சுமார் 13.6 பில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்படுகிறது. உலக அளவில் புகழ்பெற்ற இளம் தொழிலதிபராக திகழும் இவரை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றியது.
2014-ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யா படை தாக்குதலை Pavel Durov கடுமையாக விமர்சித்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல இவரின் VK என்ற செயலில் இருக்கும் நபர்களின் தனிப்பட்ட தகவல்களை ரஷ்யா அரசுக்கு தர Pavel Durov திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
100 குழந்தை
இதன் காரணமாகவே, அவர் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் எதிரிகளில் ஒருவராக உள்ளார் என பல செய்திகள் உள்ளது. இவருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. ஆனால், 100'க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர் தந்தையாகியுள்ளார்.
எப்படி என யோசிக்கிறீர்களா? விஷயமென்னவென்றால், sperm donation மூலமே இவருக்கு 100 குழந்தைகள் இருப்பதாக இவருக்கு சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது கூறியுள்ளார் Pavel Durov.
தனது நண்பரின் கோரிக்கையின் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாகவே இவர் sperm donation'இல் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.