கிம் ஜா ஹுன் அரசியல் வாரிசான பள்ளி மாணவி - வடகொரியா அரசியலில் தீவிரம்?
உலக அதிபர்களில் வித்தியாசமான ஒரு தலைவராகவே திகழ்கிறார் கிம் ஜா ஹுன்.
கிம் ஜொங்-உன்
வடகொரியா நாடே தற்போது வரையில் வித்தியாசமான நாடாக உள்ளது. அந்நாட்டின் பழவழக்கங்களும், கட்டுப்பாடுகளும் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
நாட்டின் அதிபரான கிம் ஜா ஹுன் உலக அரங்கில் முக்கிய தலைவராகவே திகழ்கிறார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் உலக நாடுகள் உற்றுநோக்குகிறார்கள்.
பள்ளி மாணவி
தற்போது மற்றுமொரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, அவருக்கு அடுத்து நாட்டின் அதிபராக அவரின் பள்ளி பருவ மகள் வருகிறார் என கூறப்படுகிறது.
12 வயதே நிரம்பியுள்ள அவரின் மகள், பொதுவெளியில் காணப்பட்டு சுமார் 1 வருடம் மேலாகியிருந்ததாக அந்நாட்டின் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த சூழலில் தான், தற்போது அவர் தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாக தகவல் வெளிவருகின்றன. அவருக்கு அரசியல் தொடர்பான விஷயங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால், தற்போதிலிருந்தே அவருக்கு இது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.