59 கி.மீ தாண்டாத குண்டு தொலைக்காத ரயில் - கிம் ஜாங் உன்'னின் அச்சமா..?
ரஷ்யா பிரதமர் புதினை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திக்க இருக்கும் நிலையில், அதற்காக அவர் மேற்கொண்ட ரயில் பயணம் பெரும் கவனம் பெற்றுள்ளது.
புதின் - கிம் ஜாங் உன் சந்திப்பு
உலக நாடுகளிலேயே தனித்து நின்று வருகிறது வடகொரியா. உலக ஆதிக்க சக்தி நாடான அமெரிக்காவை அவ்வப்போது அணு ஆயுதங்களால் அச்சுறுத்துவதை தொடர்கதையாக கொண்டுள்ள வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்'னின் செயல்களும் பெரும் கவனத்தை பெறுகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையாக கிம் ஜாங் உன் முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அதில் கிம் ஜாங் உன் பயணத்திற்காக உபயோகப்படுத்திய ரயிலும், அப்போது விதிக்கப்பட்ட கெடுபிடிகளும் தான்.
வடகொரியாவிலிருந்து ரஷ்யா 1,180 கி.மீ தொலை கொண்டதாகும். இந்த தூரத்தை கிம் ஜாங் உன் சுமார் 20 மணிநேர பயணத்தை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயமென்னவென்றால் இந்த ரயில் வெறும் 59 கி.மீ வேகத்தில் தான் பயணித்துள்ளது. அதற்கான காரணமும் கவனிக்கவைக்கின்றன.
வெறும் 59 கி.மீ சென்ற ரயில்
ரயில்கள் 300 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த ரயிலின் கன்னத்தின் காரணமாக வெறும் 59 கி.மீ வேகத்தில் தான் இந்த ரயில் பயணித்துள்ளது. வெறும் துப்பாக்கி குண்டு அல்ல, ராக்கெட் லஞ்சரே பயன்படுத்தினாலும் துளைக்கமுடியாத அளவிற்கு மிகவும் கனமான பேட்டியாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டதே ரயில் வேகத்தின் காரணமாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், ரயிலில் இருப்பவர்களுக்கு இறால் மற்றும் பன்றி இறைச்சி, விலையுயர்ந்த பிரெஞ்ச் ஒயின் போன்றவை உள்ளது. அதனைத்தவிர ஆலோசனை நடத்துவதற்கான படுக்கையறை, ஆலோசனை அறை போன்றவையும் தனித்தனியே உள்ளது.
விமான பயணத்தை தவிர்த்து ரயிலில் கிம் ஜாங் உன் பயணிக்க காரணமாக அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோருக்கு விமான பயணத்தின் மீதிருந்த அச்சமும், எல்லை விட்டு எல்லை தாண்டுவதால் ஏற்பட கூடிய சிக்கல்களை தவிர்க்கவும் இந்த ரயில் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.