கையில் சரக்கு பாட்டிலுடன் பாவனி - ஆடிப்போன ரசிகர்கள்!

Viral Video Serials Pavani Reddy Indian Actress
By Sumathi Nov 22, 2022 05:30 PM GMT
Report

பாவனி வெளியிட்ட கையில் சரக்குடன் இருக்கும் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாவனி

பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கையில் சரக்கு பாட்டிலுடன் பாவனி - ஆடிப்போன ரசிகர்கள்! | Pavani Reddy With A Glass Of Wine Viral

அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். பின்பு சில புகைப்படங்கள், பதிவுகளைக் கொண்டு தனது காதலை மறைமுகமாக கூறினார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

சமீபத்தில் பிபி ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் அட்டகாசமாக நடனமாடிய நிலையில், திருமணமும் நடைபெற்றது. திருமணம் நடன நிகழ்ச்சிக்காக நடைபெற்றிருந்தாலும், ரசிகர்கள் பெரும் குஷியில் காணப்பட்டனர்.

கையில் சரக்கு பாட்டிலுடன் பாவனி - ஆடிப்போன ரசிகர்கள்! | Pavani Reddy With A Glass Of Wine Viral

அதன்பின் அமீரின் காதலுக்கு பாவனி பச்சைக்கொடி காட்டினார். தொடர்ந்து இருவரும் அஜித் நடிக்கும் துணிவு படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், பாவனி தனது இன்ஸ்டா பக்கத்தில் கையில் சரக்குடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.