அப்படிதான் நடந்துப்பேன்.. பாவணியிடம் பளீச்னு சொன்ன அமீர்!
பாவனிக்கு அவரது காதலர் அமீர் அசத்தலாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
அமீர்-பாவனி
பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். பின்பு சில புகைப்படங்கள், பதிவுகளைக் கொண்டு தனது காதலை மறைமுகமாக கூறினார்.
காதல்
சமீபத்தில் பிபி ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் அட்டகாசமாக நடனமாடிய நிலையில், திருமணமும் நடைபெற்றது. திருமணம் நடன நிகழ்ச்சிக்காக நடைபெற்றிருந்தாலும், ரசிகர்கள் பெரும் குஷியில் காணப்பட்டனர்.
தொடர்ந்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. இந்நிலையில் இருவரும் துபாய் சென்றனர். பாவனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு அமீர், அன்பே உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்த்து
எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளீர்கல். இன்றைக்காவது நான் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்புகிறேன். உட்கார்ந்து ஓய்வெடுங்கள். நாள் முழுவதும் நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன்.
உங்களை பெற்றதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என காதல் பொங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு பாவனி Love you lots என பதிலளித்துள்ளார்.