அனகோண்டா விழுங்கிய நபர்; உயிருடன் மீட்கப்பட்ட அனுபவம் - திக் திக் நிமிடங்கள்!
அனகோண்டா பாம்பு தன்னை சாப்பிட வந்தபோது நடந்த நிகழ்வை ஒருவர் பகிர்ந்துள்ளார்.
அனகோண்டா
அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பால் ரோசோலி, கடந்த 2014ம் ஆண்டு மிகவும் ஆபத்தான ஸ்டண்ட் ஒன்றை நிகழ்த்த முடிவெடுத்துள்ளார். அதற்காக அடர்ந்த மற்றும் ஆபத்தான அமேசான் காடுகளுக்கு சென்றுள்ளார்.
இந்த நிகழ்வை பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து டிஸ்கவரி தொலைக்காட்சி தொடர் தயாரித்தது. அந்த ஸ்டண்ட் என்னவென்றால் ஒரு அனகோண்டா உயிருடன் மனிதனை விழுங்குவதை அவர்கள் படமாக்க முடிவு செய்தனர். இதற்காக பால் ரோசோலி தனக்கான பாதுகாப்பு கவசத்தை அணிந்துகொண்டு, அனகோண்டா அருகில் சென்றார்.
விழுங்கிய நபர்
அடுத்த சில நிமிடங்களில் அந்த அனகோன்டா அவரது தலையை விழுங்க தொடங்கியது. அடுத்ததாக அவரது உடலை சுற்றி வளைத்தது.இதனால் அச்சமடைந்த குழுவினர் பால் ரோசோலியை பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தற்போது பால் ரோசோலி பதைபதைக்கும் நொடிகளை பற்றி பேசியுள்ளார்.
தனக்கு கடைசியாக நினைவில் இருப்பது அனகோண்டாவின் வாய் அகலமாக திறந்தது என்றும், அடுத்த சில நிமிடங்களில் இருட்டாக மாறியதாகவும் தெரிவித்தார். மேலும், அனகோண்டா தன்னை சுற்றிக் கொண்டதும்,
விலா எலும்புகள் வெடிப்பதைப் போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ள அவர், அப்போது தான் ஆக்சிஜன் குழாய் பொருத்தியிருந்தாலும், மூச்சுவிடுவதில் சிரமத்தை உணர்ந்ததாகவும் விளக்கினார். மூச்சு விட முயற்சித்தாலும் அது முடியாமல், திகிலூட்டும் விதமாக இருந்ததாக பகிர்ந்ந்ததுள்ளார்.