5 அடி நீளமுள்ள முதலையை விழுங்கிய 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு - வைரலாகும் வீடியோ...!

Viral Video Snake Florida
By Nandhini Nov 17, 2022 10:21 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

5 அடி நீளமுள்ள முதலையை விழுங்கிய 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலையை விழுங்கிய மலைப்பாம்பு

புளோரிடாவில் 18 அடி நீளம் கொண்ட பர்மிய மலைப்பாம்பு வயிற்றுக்குள் 5 அடி நீளமுள்ள முதலை இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்த மலைப்பாம்பை பிடித்து அதன் வயிற்றுக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள முதலை மருத்துவர்கள் அகற்றினர்.

இதை புவி விஞ்ஞானி ரோஸி மூர் மற்றும் அவரது குழுவினர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். 

5 அடி நீளமுள்ள முதலையையே இந்த மலைப்பாம்பு முழுங்கியுள்ளதால் அவை எவ்வளவு சக்திவாய்ந்தவாக இருக்கும் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

மேலும், புளோரிடாவில், பல உயிரினங்களை பர்மிய மலைபாம்புகள் அழித்து வருவதால் இந்த வகை பாம்புகள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.  

florida-python-snake-crocodile-viral-video