6வது கர்ப்பம்; தனக்குத் தானே பிரசவம் - சிசுவை கொடூரமாக கொன்று தாயும் பலியான பின்னணி!
தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண், ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பிரசவம்
தஞ்சாவூர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் செந்தில்(45). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (38). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான வசந்தி அதிகளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரத்தப்போக்கு
இதையடுத்து, அவரது சடலத்தை உறவினர்கள் மருத்துவமனைக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால், போலீஸில் புகாரளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், நடந்த விசாரணையில் தனக்கு தானே வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். குழந்தை பிறந்தவுடன் அதன் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு, அக்குழந்தையை பெயிண்ட் வாலியில் வைத்து துணியால் மூடிவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது தெரியவந்தது. வறுமை நிலையில் உள்ளதால் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது முடியாது எனக் கருதியதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.