வாரத்திற்கு 250 நோயாளிகள் மருத்துவமனையில் மரணம் - வெளியான அதிர்ச்சி காரணம்!
வாரம் ஒன்றிற்கு சராசரியாக 268 பேர் நீண்டநேரம் சிகிச்சை கிடைக்காமல் காத்திருந்து உயிரிழந்துள்ளனர் என்ற அதிச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நோயாளிகள் உயிரிழப்பு
இங்கிலாந்து நாட்டில் அவசரகால சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழப்பது பற்றி அவசரகால மருத்துவத்திற்கான ராயல் கல்லூரி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார சேவை துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், வார்டுக்கு வெளியே நீண்டநேரம் வரை வரிசையில் காத்திருந்துள்ளனர். இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் போயும், எண்ணற்றோர் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளனர்.
அதிச்சி தகவல்
கடந்த ஆண்டு வாரம் ஒன்றிற்கு சராசரியாக 268 பேர் நீண்டநேரம் சிகிச்சை கிடைக்காமல் காத்திருந்து உயிரிழந்துள்ளனர் என்ற அதிச்சி தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு பிப்ரவரியில் மட்டுமே அவசரகால பிரிவில்,
12 மணிநேரத்திற்கும் கூடுதலாக காத்திருந்தவர்களின் எண்ணிக்கை 45,000 என தெரியவந்துள்ளது. மேலும், இது கடந்த 2023-ம் ஆண்டில் 15 லட்சம் நோயாளிகள் என்ற அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.