உலகின் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியல் - இந்தியாவின் நிலைமை என்ன?

India World Education
By Jiyath Mar 31, 2024 09:15 AM GMT
Report

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதிகம் படித்தவர்கள் 

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி கனடா முதலிடத்தில் உள்ளது.

உலகின் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியல் - இந்தியாவின் நிலைமை என்ன? | List Of Most Educated Countries In The World

அந்த நாட்டில் 59.96% பேர் படித்தவர்கள். இந்த பட்டியலில் இரண்டாவது இனத்தை ஜப்பான் பிடித்துள்ளது. மேலும், மூன்றாவது இடத்தில் லக்சம்பர்க்கும், நான்காவது இடத்தில் தென் கொரியாவும் உள்ளது.

பிரேசிலில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு - அப்படி என்ன ஸ்பெஷல்?

பிரேசிலில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு - அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்தியா..? 

கல்வித் தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய முன்னணி நாடுகள் 6 மற்றும் 8-வது இடத்தை பிடித்துள்ளது.

உலகின் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியல் - இந்தியாவின் நிலைமை என்ன? | List Of Most Educated Countries In The World

இந்நிலையில் உலகின் கல்வி அறிவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை. ஏனெனில் இந்தியாவில் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 20.4% பேர் மட்டுமே உயர்கல்வி அல்லது பட்டம் பெற்றுள்ளனர்.