பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்; பலியான உயிர் - உறவினர்கள் கதறல்
மருத்துவர் தூங்கியதால். நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறங்கிய மருத்துவர்
உத்தரப்பிரதேசம், மீரட் மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு மருத்துவர், மேசை மீது கால்களை வைத்துக்கொண்டு அலட்சியமாக உறங்கி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் காயமடைந்த ஒரு நோயாளி அருகில் சக்கர நாற்காலியில் கவனிக்கப்படாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த காயமடைந்த நபர் உயிரிழந்தார்.
நோயாளி பலி
விபத்து காயங்களுடன் வந்த தங்கள் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவர் தூங்கி கொண்டிருந்ததாகவும், அவரை எழுப்பியும் அவர் எழும்பவில்லை என்றும், இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவர் உயிரிழந்ததாக நோயாளியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.