ஒரு இடத்தில் மட்டும் அதிகமா முடி கொட்டுதா?.. அப்போ கன்பார்ம் இந்த பிரச்சனை தான்!
தலைமுடி ஒரு இடத்தில் மட்டும் இப்படி கொட்டினால் என்ன பிரச்சனை வரும் என்பதை பார்ப்போம்.
முடி உதிர்வு
தலைமுடி சாதாரணமாக தினமும் குறைந்தபட்சம் 100 முடிகள் உதிர்கின்றன. ஆனால் இதற்கும் அதிகமாக உங்களுக்கு தலைமுடி உதிர்ந்தால், உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். தலையில் ஒரு இடத்தில் மட்டும் அதிகமாக முடி கொட்டி இருந்தால் அப்போ இந்த பிரச்சன்னை இருக்க வாய்ப்பு உள்ளது.
அது அலோபேசியா அரேட்டா (Alopecia areata), இது ஒரு வகையான முடி உதிர்வு பிரச்சனை, இந்நோய் தாக்கினால் நமது தலையில் திட்டு திட்டாக முடி உதிர்வு ஏற்படும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் தாக்கும். ஆட்டோ இம்யூன் நோயான இது அலர்ஜியும் முடி உதிர்வையும் உண்டாக்கும்.
நோய்
இந்நிலையில், இந்த நோயினால் பெரும்பாலும் உச்சந்தலையில் அதிகளவு முடி உதிர்வு ஏற்பட்டாலும், உடல் முழுவதுமே முடி உதிர்வு காணப்படும். மேலும், இந்த நோய் நம் உடலில் உள்ள முடி மற்றும் நகங்களைத் தவிர வேறு எதிலும் இந்த பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த நோய் அதிகமானால் தலையில் உள்ள அணைத்து முடிகளையும் இழக்க கூடும், அது மறுபடியும் வளர்ந்துவிடும்.
பின்னர், நமது நகங்களில் வெள்ளை திட்டுகள் வர ஆரம்பிக்கும், பின்னர் அதன் வடிவம் மாறும். இது மற்ற ஆட்டோ இம்யூன் நோய்கள் போலவே பரம்பரை ரீதியாக வரக் கூடியது. தைராய்டு குறைபாடு, மல்டிபிள் ஸ்களீரோசிஸ், வெண்புள்ளி, முடக்கு வாதம், குடல் அழற்சி நோய், டைப்-1 டயாபடீஸ் மற்றும் செலியாக் நோய் போன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு அல்லது இந்நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அலோபேசியா நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளது.