SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகலா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பேட் கம்மின்ஸ்
2025 ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வருகிறார்.
இந்த தொடரில் இதுவரை ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி, 5 தோல்வி மற்றும் 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ,இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதற்கு காரணம், அவரது மனைவி பெக்கி கம்மின்ஸ் (Becky Cummins) பேட் கம்மின்ஸுடன் விமான நிலையத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதன் கீழே, "குட் பை இந்தியா, இந்த அழகான நாட்டிற்கு வருகை தந்ததை நாங்கள் மிகவும் விரும்பினோம்" என பதிவிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர், பேட் கம்மின்ஸ் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் விளையாட உள்ளதால், ஐபிஎல் தொடரில் பாதியிலேயே விலக உள்ளாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
இந்த தொடரில் ஹைதராபாத் அணி 9வது இடத்தில் உள்ள நிலையில், அணியில் சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகுவதாக வரும் தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது குறித்து பேட் கம்மின்ஸ் தரப்பில் இருந்தோ, ஹைதராபாத் அணி தரப்பில் இருந்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பேட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது. அந்த ஏலத்தில் 2வது அதிக தொகை வாங்கப்பட்ட வீரர் ஆவார். இந்த ஏலத்தில் ரூ.18 கோடிக்கு அவரை ஹைதராபாத் அணி தக்க வைத்துக்கொண்டது.