நான் உங்கள் மனைவியை.. இந்திய ரசிகர் அடித்த கமெண்ட் - கூலாக பதிலளித்த பாட் கம்மின்ஸ்!

Jiyath
in கிரிக்கெட்Report this article
எல்லை மீறி கமெண்ட் செய்த ரசிகருக்கு கூலாக பதிலளித்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்.
பாட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் "சூப்பரான தாய், மனைவி, என் காதலி மற்றும் ஒரு சர்ஃபரும் (அலைச்சறுக்கு வீராங்கனை) கூட. இனிய காதலர் தின வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார்.
கூலாக பதில்
அந்த புகைப்படத்திற்கு கீழ் 'பர்கான் கான்' என்ற பயனர் ஒருவர், "நான் ஒரு இந்தியன்.. நான் உங்கள் மனைவியை காதலிக்கிறேன்"என்று எல்லை மீறி கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு பாட் கம்மின்ஸ் "நான் இதை அவரிடம் தெரிவித்து விடுகிறேன்" என்று கூலாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் கம்மின்சாய் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் இந்திய ரசிகர்கள் எல்லை மீறி கமெண்ட் செய்த அந்த பயனரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.