பாண்டியாக்கு கஷ்டம் தான்; அதை பற்றி பேச எதுவுமில்லை- ஓப்பனாக பேசிய பேட் கம்மின்ஸ்!

Hardik Pandya Pat Cummins IPL 2024
By Swetha Apr 11, 2024 03:30 PM GMT
Report

பேட் கம்மின்ஸ் அளித்த பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ளார்.

பாண்டியாக்கு கஷ்டம் 

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பை ஏற்றுள்ளார். இதனால் பாண்டியாவை மும்பை ரசிகர்களே வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாண்டியாக்கு கஷ்டம் தான்; அதை பற்றி பேச எதுவுமில்லை- ஓப்பனாக பேசிய பேட் கம்மின்ஸ்! | Pat Cummins Comments About Hardik Pandya

அவர் டாஸ்-க்கு, பேட்டிங், பீல்டிங் என் எப்பொழுது களத்தில் இருந்தாலும் ரசிகர்கள் அவருக்கு எதிராக கோஷமிடுவதும், அவர் உள்ளே வரும்போது ரோகித் பெயரை கத்துவது என அவருக்கு தொடர்ந்து தர்மசங்கடத்தையே ஏற்படுத்தி வருகினறனர்.

ஹர்திக் பாண்டியாவை நோகடிக்கும் ரசிகர்கள்...மும்பை மைதானத்திலேயே நடைபெற்ற சோகம்..?

ஹர்திக் பாண்டியாவை நோகடிக்கும் ரசிகர்கள்...மும்பை மைதானத்திலேயே நடைபெற்ற சோகம்..?

பேட் கம்மின்ஸ்

மேலும், இது வரை ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நடந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ளார்.

பாண்டியாக்கு கஷ்டம் தான்; அதை பற்றி பேச எதுவுமில்லை- ஓப்பனாக பேசிய பேட் கம்மின்ஸ்! | Pat Cummins Comments About Hardik Pandya

அப்போது அவர், “உண்மையில் இதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. நான் அவரின் இடத்தில் இல்லை. இந்திய ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். இது அவருக்கு ஒரு கஷ்டமான காலகட்டம், அவ்வளவுதான். நிச்சயம் இந்த சூழல் அவருக்கு மாறும்” என்று கூறினார்.