ஹர்திக் பாண்டியாவை நோகடிக்கும் ரசிகர்கள்...மும்பை மைதானத்திலேயே நடைபெற்ற சோகம்..?
ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக நியமித்ததில் இருந்து அவருக்கு தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளது வருகின்றது.
மும்பை பேட்டிங்
3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைத்துள்ள மும்பை அணி, இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டு வருகின்றது.
ஹர்திக் பாண்டியவை மும்பை அணி, குறிப்பாக ரோகித் சர்மா ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இது மும்பை அணிக்கு வாழ்வா..? சாவா..? ஆட்டமாக பார்க்கப்படுகிறது.
அவமதித்த ரசிகர்கள்
பெரும்பாலான அணிகள் தங்களது ஹோம் கிரௌண்ட்டில் விளையாடும் போது, ரசிகர்கள் கேப்டனை ஆரவாரப்படுத்தி குஷிப்படுத்துவார்கள். ஆனால், இந்த நிலை தற்போது மும்பைக்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு தலைகீழாக உள்ளது.
கேப்டன் ஹர்திக் இன்று டாஸ் போட வந்த போதும், அவரின் பெயரை கமெண்ட்ரியில் சொன்ன மும்பை அணி ரசிகர்கள் மவுனம் காத்தனர். இது பெரும் எதிர்மறையான செயலாகவே இருக்கின்றது.
ரோகித் சர்மா இன்று பேட்டிங் செய்ய வந்த போதும், சிக்ஸர்களை பறக்கவிட்ட போதும் ஆரவாரம் செய்த ரசிகர்கள் கூட்டம், மறைமுகமாக தங்களது எதிர்ப்பை ஹர்திக் பாண்டியாவிற்கு காட்டியுள்ளது. இதுவும் ஒரு விதத்தில் அவமதிப்பே ஆகும். பேட்டிங் செய்து வரும் மும்பை அணி 9 ஓவர்களில் 92 ரன்களை குவித்துள்ளது.
துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 49 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா குமார் யாதவ் டக் அவுட்டாகி வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
மற்றொரு துவக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 29 ரன்களுடனனும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.