பிறந்து 9 நாளில் நடந்தேன்; தப்பா பேசிட்டேன்.. மன்னிச்சிடுங்க - பாஸ்டர் சிறுவன் பகிரங்க மன்னிப்பு!
பாஸ்டர் சிறுவன் ஒருவர் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியம்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஜோயல் இம்மானுவேல்(14). இந்தச் சிறுவன் 10 வயதில் இருந்து கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்து வருகிறார். அப்போது ஊழியம் ஒன்றின் போது, நான் 5 கிலோவில் பிறந்தேன்.
அதோடு இல்லாமல் பிறந்த 9 நாளில் நடந்தேன். நான் தனியாக பாத் ரூம் போவேன். நடக்க தொடங்கிய பின் நானே தனியாக பணிகளை செய்தேன். நான் மிக வேகமாக வளர்ந்தேன். அப்போதில் இருந்தே கர்த்தர் என்னுடன் இருக்கிறார் என்று பேசி சர்ச்சையை கிளப்பினார்.
மன்னிப்பு
மேலும் கடும் விவாதத்தை கிளப்பியது இந்த தகவல். இந்நிலையில், நான் தவறாக பேசிவிட்டேன். தவறாக சொல்லிவிட்டேன். நான் சொல்லியதில் உண்மை கிடையாது. நான் 9 நாளில் எல்லாம் நடக்கவில்லை. வாய் தவறி சொல்லிவிட்டேன்.
மன்னிக்க தெரிஞ்சவன் தான் மனுசன்
— கபிலன் (@_kabilans) August 23, 2023
மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுசன் தம்பி இப்ப பெரிய மனுசன் ஆகிட்டார் ? pic.twitter.com/Yw7g84Vz12
நான் 9 மாதங்களில் நடந்தேன். அதைத்தான் அப்படி சொல்லிவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். என்னுடைய தவறிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.