இனி பாஸ்போர்ட் பெற அலைய வேண்டாம் - மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

India Passport Madhya Pradesh
By Karthikraja Jan 12, 2025 06:06 AM GMT
Report

ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் சேவை மையம்

மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா திறந்து வைத்தார். 

jyotiraditya scindia ஜோதிராதித்ய சிந்தியா

அதை தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், "தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இந்த ஒரு நாட்டோட பாஸ்போர்ட் இருந்தா போதும் - 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்!

இந்த ஒரு நாட்டோட பாஸ்போர்ட் இருந்தா போதும் - 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம்!

பாராளுமன்ற தொகுதி

ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன்படி நாட்டின் 543 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த, வெளியுறவு அமைச்சகத்துடன் இந்திய தபால் துறை இணைந்து செயல்படும். 

passport seva kendra in tamilnadu

நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்றும் ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது" என கூறினார்.

தற்போது பாஸ்போர்ட் பெற அந்தந்த மாவட்ட தலைநகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ள நிலையில், இனி தங்களது பாராளுமன்ற தொகுதியிலே பெற்றுக்கொள்ளலாம்.