டவுன் பஸ்ஸா.. வந்தே பாரத்தா? டிக்கெட் இல்லாமல் ஏறிய கும்பல் - தடுமாறிய பயணிகள்!
வந்தே பாரத் ரயிலில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வந்தே பாரத்
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் வரை 'வந்தே பாரத்' ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கடந்த ஜூன் 9-ம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக வந்தே பாரத் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், அந்த ரயிலில் முன்பதிவு செய்யாத மற்றும் டிக்கெட் எடுக்காத ஏராளமான பயணிகள் கூட்டம் கூட்டமாக நின்றபடி பயணித்துள்ளனர்.
நடவடிக்கை
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இது வந்தே பாரத் ரயிலா? மாநகர பேருந்தா? என்பது போன்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதேபோல், மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய ரயில் வசதிகள் இல்லாததே இந்த நெருக்கடிக்கு காரணம் என சிலர் கூறி வருகின்றனர்.
Now Premium Vande Bharat is also facing the same fate as other trains.
— Gems of Engineering (@gemsofbabus_) June 9, 2024
We do not need a puppet Railway Minister, we need a new Railways which is at least accountable. pic.twitter.com/1V5NwiavQI