சாதாரண டிக்கெட் எடுத்துவிட்டு ரிசர்வ் பெட்டியில் பயணம்; வடமாநிலத்தவர்கள் கொடுமை - கடும் அவதி!
சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ரயில் பயணம்
சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரலில் இருந்து அதிக அளவு ரயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.
இதில், முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் அடாவடித்தனமாக ஏறி இருக்கையை அபகரிக்கின்றனர்.
தொடரும் அவலம்
இந்நிலையில், சென்டிரலில் இருந்து ஹவுரா சென்ற விரைவு ரயிலில் முன்பதிவு செய்த பயணிகள் 18 பேர் ரெயிலில் ஏறமுடியாமல் தவித்து வீடு திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்பதற்கு முன்பாகவே வடமாநிலத்தவர்கள், முன்பதிவு பெட்டியில் முண்டியடித்து ஏறியுள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல் வடமாநிலத்தவர்கள் செல்வதை அனுமதித்தால், நாளடைவில் வடமாநிலங்களில் உள்ள ரயில் பயணம்போல தமிழ்நாடு ரயில் பயணம் மாறிவிடும்.
எனவே, இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தெற்கு ரயில்வே சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரயில்வே சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.