அனைத்து பயணிகளும் அபாய சங்கிலி இழுத்து ரயிலை நிறுத்தியதால் பரபரப்பு - என்ன காரணம்?
சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் நிறுத்தியுள்ளனர்.
அபாய சங்கிலி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை செல்லும் ‘சேரன் எக்ஸ்பிரஸ்’ரயில் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு புறப்பட்டது. அப்போது ஏசி வசதி கொண்ட பெட்டிகளில் ஏசி வேலை செய்யவில்லை.
இதனால் கடும் அவதிக்கு உள்ளான பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இந்த தகவலறிந்து ரயில்வே அதிகாரிகள் ரயில் நிறுத்தப்பட்ட 11வது நடைமேடைக்கு விரைந்து வந்தனர். அப்போது பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காரணம்?
இதையடுத்து, உடனடியாக ரயில்வே அதிகாரிகள் ஏ.சி. மெக்கானிக்குகளை வரவழைத்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி போர்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். ரயிலில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இரவு 10. 55 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.
ஏ.சி வேலை செய்யாததால் அபாய சங்கிலியை பிடித்து இழுந்து பயணிகள் ரயிலை நிறுத்திய சம்பவம் சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.