வாந்தி, மயக்கத்தால் தவித்த பயணிகள் - செங்கோட்டை அதிவேக ரயிலில் என்ன நடந்தது?

Chennai
By Sumathi Aug 23, 2023 04:24 AM GMT
Report

ஏசி சரியாக வேலை செய்யாததால் பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாந்தி, மயக்கம்

செங்கோட்டையில் இருந்து காரைக்குடி, அறந்தாங்கி, திருவாரூர் வழியாகச் சென்னை செல்லும் ரயிலில் ஏசி பெட்டியிலிருந்த பயணிகள், ஏசி சரியாக வேலை செய்யவில்லையென ரயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

வாந்தி, மயக்கத்தால் தவித்த பயணிகள் - செங்கோட்டை அதிவேக ரயிலில் என்ன நடந்தது? | Passengers Stopped Express Train From Sengottai

மேலும், வாந்தி மயக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இரவு 10 மணிக்கு அறந்தாங்கி ரயில் நிலையத்தில் ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.

 பயணிகள் அவதி

உடனே ரயில்வே ஊழியர்கள் சென்று பார்த்தபோது, ஏசியிலிருந்து குறைந்த அளவே குளிர் வெளியானது தெரியவந்தது. அதனையடுத்து, இங்கு சரிசெய்ய முடியாது, திருவாரூரில் இதற்கான பணியாளர்களைத் தயாராக இருக்கச் சொல்லி இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

வாந்தி, மயக்கத்தால் தவித்த பயணிகள் - செங்கோட்டை அதிவேக ரயிலில் என்ன நடந்தது? | Passengers Stopped Express Train From Sengottai

ஆனால், பயணிகள் அந்தப் பெட்டியில் அமர்ந்து பயணிக்க முடியாது என்று பயணிகள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக, அதிகமான சத்தத்துடன் ஊழியர்கள் ஹாரன் அடித்தால் பயணிகள் ரயிலில் ஏறினர்.