ரயிலை பார்த்து அலறியடித்து ஓடிய பயணிகள் - என்ன காரணம்? அதிர்ச்சி சம்பவம்!
ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் திடீரென பயந்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
அலறிய பயணிகள்
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. அந்த ரயில் நள்ளிரவு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது ரயில் என்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான நிலையில் இளைஞரின் பிணம் ஒன்று சிக்கியிருந்தது.
இதனைக் கண்ட பயணிகள் அலறியடித்து ஓடினர். பயணிகள் அனைவரது அலறல் சத்தம் கேட்டு கீழே இறங்கிய என்ஜின் டிரைவர், ரயிலை சிக்கி இருந்த இளைஞரின் சடலத்தை கண்டு திடுக்கிட்டார்.
என்ன காரணம்?
இந்த தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பிறகு அங்கு கிடந்த சடலத்தை மீட்டனர். அந்த இளைஞரின் உடலில் இரண்டு கால்களும் துண்டாகி இருந்தது.
மேலும் ரெயிலில் சிக்கி இழுத்து வந்ததால் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்களும், தலையின் பின் பகுதி சிதைந்தும் இருந்தது. உடலில் இருந்து துண்டான கால்கள் எங்கு கிடக்கிறது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.