இனி ரயிலில் இதை செய்தால் ரூ.1000 அபராதம் - பயணிகளே கவனம்..
ரயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
ரீல்ஸ் மோகம்
ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ரீல்ஸ் எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ரயில் நிலையங்களில் ரீல்ஸ் எடுக்கும் போது அஜாக்கிரதையால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதனை தடுக்க ரயில்வே துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இந்த செயல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விதிகள் படி ரயில் நிலையங்களில் மொபைல் போனில் வீடியோ எடுக்கக்கூடாது. புகைப்படம் மட்டுமே எடுக்கலாம். ஆனால் சிலர் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.
இனி அபராதம்..
ரயில் நிலையங்கள், தண்டவாளயங்கள் ஆகியவற்றில் மொபைல் போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சி.சி.டி.வி., கேமரா மூலம் இதனை கண்காணிப்பார்கள். மீறி ரீல்ஸ் எடுத்தால் எடுத்தால் ரூ 1,000 அபராதம் விதிக்கப்படும்.
பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ரீல்ஸ் எடுக்கும் நபர்கள் ஈடுப்பட்டால் கைது செய்யப்படுவார்கள். மீறி செயல்படுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் ரயில்வே அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் அடிக்கடி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள். அப்பொழுது எச்சரிக்கையை மீறி ரில்ஸ் எடுக்கும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.