டிக்கெட் புக்கிங், ஃபுட் ஆர்டர் - இனி எல்லாம் ஒரே செயலியில்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க
ரயில் பயணிகளுக்கு ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்க செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
RailOne
ரயிலில் பயணிப்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், உணவு ஆர்டர் செய்ய, ரயில் எங்கே இருக்கிறது என்று பார்க்க, PNR சரிபார்க்க என்று அனைத்திற்கும் தனித்தனியாக செயலிகளை பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் ரயில் பயணம் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் 'RailOne' என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இனி ஈஸி..
இதன்மூலம் டிக்கெட் முன்பதிவு, ரயில் தொடர்பான தகவல், உணவு ஆர்டர் செய்தல் என அனைத்தையும் ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளலாம். இதனை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் 40-ஆவது ஆண்டு தொடக்க தின கொண்டாட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்த செயலியில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு சேவையில் முன்பதிவு செய்யப்பட்ட, முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் அடங்கும். மேலும் முன்பதிவு செய்யப்படாத மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதில் IRCTC Rail Connect அல்லது UTS OnMobile இலிருந்து ஏற்கனவே உள்ள கணக்கு சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையலாம் அல்லது மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி புதிய கணக்கை உருவாக்கலாம்.