விமான கழிவறையை பூட்டிக்கொண்டு நபர் செய்த காரியம்; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

London Flight
By Swetha Mar 20, 2024 12:28 PM GMT
Report

பயணி ஒருவர் விமான கழிவறையை பூட்டிக்கொண்டு நெடுநேரம் வெளியே வராத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான கழிவறை

பாங்காக்கில் இருந்து லண்டன்னை நோக்கி பயணிக்கும் பி.ஆர்.67 என்ற எண் கொண்ட தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது.

விமான கழிவறையை பூட்டிக்கொண்டு நபர் செய்த காரியம்; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Passengers Act Of Locking Flight Toilet In Mid Air

இந்நிலையில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் கழிவறைக்குள் சென்று உட்புறம் கதவை பூட்டி கொண்டு நெடுநேரம் வெளியே வரவேயில்லை. இதனை கவனித்த ஊழியர் ஒருவர் சென்று என்னவென்று பார்த்துள்ளார்.

கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு; மனமுடைந்த மனைவி செய்த காரியம் - பகீர் சம்பவம்!

கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத உறவு; மனமுடைந்த மனைவி செய்த காரியம் - பகீர் சம்பவம்!

 காத்திருந்த அதிர்ச்சி

அப்போது அவர் காயங்களுடன் கிடந்ததை பார்த்து ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, அவர் அந்த விமானத்தில் இருந்த மருத்துவரை கூப்பிட்டு அந்த பயணிக்கு முதலுதவி செய்துள்ளார்.

விமான கழிவறையை பூட்டிக்கொண்டு நபர் செய்த காரியம்; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி! | Passengers Act Of Locking Flight Toilet In Mid Air

பின்னர், அவசர நடவடிக்கையாக, அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மேலும், அந்நபர் கழிவறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என தெரிய வந்ததை அடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். எனினும், அவருடைய அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் கண்டறியவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.