நடுவானில் விமானத்தை கடத்த முயன்ற நபர் - பரபரப்பான வீடியோ
நடுவானில் விமானத்தை அமெரிக்காவிற்கு திருப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ விமானம்
மெக்சிகோவின் பிரபல ஏர்லைன் நிறுவனங்களில் ஒன்றான வொலரிஸ்(Volaris) க்கு சொந்தமான விமானம் ஒன்று, மெக்சிகோவில் உள்ள பஜியோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து, டிஜுவானா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:17க்கு கிளம்பிய இந்த விமானத்தை, புறப்பட்ட 45 நிமிடத்தில், விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தை அமெரிக்கா நோக்கி திருப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
கடத்த முயற்சி
மரியோ என அடையாளம் காணப்பட்ட 31 வயதான நபர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பயணம் செய்துள்ளார். "திடீரென விமான பணிப்பெண்களை தாக்கிய அவர், விமானத்தை அமெரிக்காவிற்குத் திருப்புவதற்காக விமானி அறைக்குள் நுழைய முயன்றார்" என்று பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு செயலகத்தின் அறிக்கை கூறுகிறது.
அந்த நபரை மடக்கி பிடித்த விமான குழுவினர், உடனடியாக விமானத்தை குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினர். அதன் பின் மெக்சிகோ பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது நெருங்கிய உறவினர் கடத்தப்பட்டதாகவும், டிஜுவானாவுக்குச் சென்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
31-year-old man arrested Sunday trying to hijack a plane in Mexico and divert it to US.
— Paul A. Szypula 🇺🇸 (@Bubblebathgirl) December 9, 2024
Flight was bound for Tijuana when a Mexican man “attacked a flight attendant and tried to storm the cockpit.”
He says he was threatened about traveling to Tijuana.pic.twitter.com/R3GdoqyAzy
அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட பின், குவாடலஜாரா விமான நிலையத்தில் இருந்து, மீண்டும் பயணிகள் சேர வேண்டிய டிஜுவானா சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளது.