பறக்கும் விமானத்தில் தம்பதிகள் உடலுறவு - கமெண்ட்ரியுடன் வீடியோவை லீக் செய்த விமான குழு
தம்பதிகளின் வீடீயோவை வெளியிட்ட விமான குழு மீது நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் உடலுறவு
கடந்த நவம்பர் 29ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு ஸ்விஸ் இன்டர்நேஷனல் விமானமான போயிங் 777 பறந்துக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென அங்கிருந்த ஒரு தம்பதி காக்பிட் அருகே சென்று உடலுறவில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் விமானத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியது.
பரவிய வீடியோ
இதை எதேச்சையாக கவனித்த விமான குழுவினர் தங்களது செல்போனில் அதை படம்பிடித்து அதை வர்ணனையுடன் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் பரவிய நிலையில் விமான குழுவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஸ்விஸ் இன்டர்நேஷனல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், "ஒருவரின் விருப்பம் இல்லாமல் அவரை வீடியோ எடுப்பது தவறு. அதிலும் விதிமுறைகளுக்கு மீறி அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்தது பெரிய தவறு.
விமானத்தில் தம்பதி செய்தது தவறு என்றாலும் கூட எங்கள் ஊழியர்கள் எங்கள் நிறுவன வழிகாட்டு நெறிமுறைப்படி நடந்திருக்க வேண்டும். இது தொடர்பாக தீவிர விசாரணை செய்யப்பட்டு விமான குழு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.