இருக்கைக்காக நடந்த வாக்குவாதம்.. ஓடும் ரயிலில் வாலிபர் வெட்டி கொலை - பகீர் தகவல்!
ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாரணாசி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து வாரணாசி நோக்கி பேகம்புரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வந்துகொண்டிருந்தது. இந்த ரயிலில் அமேதியின் மதேரிக்கா பகுதியைச் சேர்ந்த தவுகித் என்ற வாலிபர் மற்றும் அவரது தம்பி பயணம் செய்துள்ளார்.
பேகம்புரா எக்ஸ்பிரஸ் ரயில் சுல்தான்பூரில் நின்றுள்ளது. அந்த ரயிலில் கவுதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஏறியுள்ளனர். அப்போது இருக்கைக்காக தவுகித்துக்கும், சில இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொலை
இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றவே இளைஞர்கள் தவுகித்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து ஓடும் ரயிலில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது .உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.