திடீரென தலையில் ரத்தம்..விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்ட பயணி - பரபரப்பு சம்பவம்!

Flight World
By Swetha Aug 23, 2024 01:00 PM GMT
Report

பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழிந்த ரத்தம்..

மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹெர்னான்டஸ் கார்னியர் (27) என்ற பயணி ஒருவர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். வானில் விமானம் பறக்க தொடங்கிய சில நேரத்தில் திடீரென அவரது தலையில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்துள்ளது.

திடீரென தலையில் ரத்தம்..விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்ட பயணி - பரபரப்பு சம்பவம்! | Passenger Head Bleeds Got Arrested In Flight

அங்கிருந்த விமான பணியாளர்கள் கார்னியரை விமானத்தில் இருந்து வெளியேற வலியுறுத்தினர். எனினும், அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளார். நீண்ட நேரம் அறிவுறுத்திய பிறகும் விமானத்தில் இருந்து கார்னியர் வெளியேற மறுத்ததால், பணியாளர்கள் காவல் துறை உதவியை நாடினர்.

விமானத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? அருவருப்பான விஷயங்களை போட்டுடைத்த பணிப்பெண்!

விமானத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா? அருவருப்பான விஷயங்களை போட்டுடைத்த பணிப்பெண்!

பரபரப்பு சம்பவம்

இந்த தகவலறிந்து வந்த போலீசார் கார்னியரை விமானத்தில் வைத்து கைது செய்து வெளியே அழைத்து சென்றனர். இவருடன் பயணிக்க இருந்த பிலான்கா லயோலாவும் விமானத்தில் இருந்து கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

திடீரென தலையில் ரத்தம்..விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்ட பயணி - பரபரப்பு சம்பவம்! | Passenger Head Bleeds Got Arrested In Flight

இதன் காரணமாக குறிப்பிட்ட விமானம் அன்றிரவு புறப்படாமல் அதிகாலையில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தில் விமான அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து, ரகளையில் ஈடுபட்ட,

கார்னியர் மற்றும் லயோலா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக தலையில் இருந்து இரத்தம் வழிந்ததால், கார்னியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.