நள்ளிரவில் திடீரென பற்றி எறிந்த ரயில் பெட்டி - கேரளாவில் பரபரப்பு!

Kerala Fire
By Vinothini Jun 01, 2023 06:30 AM GMT
Report

கேரளாவில் இரவு நேரத்தில் பயணியர் விரைவு ரயில் பெட்டிகள் பற்றி தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து

கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

passanger-train-fire-accident-in-kerala

உடனடியாக ரயில்வே அதிகாரிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில் ஒரு ரயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

விசாரணை

இதனை தொடர்ந்து, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

passanger-train-fire-accident-in-kerala

இந்த தீ விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தீ விபத்து காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.