விமானம் நடுவானில் பறக்கும்போதே திடீரென கதவை திறந்த பயணி - அலறிய சக பயணியர்!

South Korea Flight
By Vinothini May 27, 2023 06:36 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது அதில் பயணித்த நபர் பாதியில் கதவை திறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம்

தென் கொரியாவை சேர்ந்த ஏசியானா ஏர்லைன்ஸ் என்ற விமானம் நேற்று தென்கொரியாவில் உள்ள ஜெஜூ என்னும் தீவிலிருந்து டேகு நகருக்கு சென்றது.

passanger-opens-emergency-door-in-flight

அது194 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது, தொடர்ந்து, விமானம் பறந்து கொண்டிருந்த போது, அங்கு உள்ள பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவை திறந்துள்ளார்.

அதனால் அங்கு காற்று வேகமாக வீசியதால் சக பயணியர் அச்சத்தில் இருந்தனர், மேலும் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது, பின்னர் உடனடியாக விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

கைது

இந்நிலையில், விமானத்தின் அவசர கால கதவை திறந்த 30 வயதான அந்த நபரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, அங்கு பயணித்த நபர் கூறியது, "விமானம் தரையிலிருந்து 250 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கதவைத் திறந்த அந்த நபர், விமானத்திலிருந்து குதிக்க முயற்சித்தார்.

விமானப் பணியாளர்களால் கதவை மூட முடியவில்லை. நாங்கள் நிச்சயம் உயிர் பிழைக்க மாட்டோம் என்று நினைத்தோம்” என்று கூறியுள்ளார்.