விமானத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? திடுக்கிடும் உண்மை உடைத்த பணிப்பெண்
விமானத்தில் நிகழும் சில அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து பணிப்பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
விமான நிகழ்வுகள்
விமானப் பணிப்பெண்ணாக இருப்பவர் மரிகா மிகுசோவா. இவர் 'டைரி ஆஃப் எ ஃப்ளைட் அட்டெண்டன்ட்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், ஒருமுறை துருக்கி பயணத்தின் போது, மூன்று பயணிகள் தங்கள் சிறுநீர் பையை விமானத்தில் விட்டுச் சென்றனர்.
அது விமானம் முழுவதும் சிந்திய நிலையில், துப்புரவு பணியாளர்களும் முறையாக சுத்தம் செய்யாமல், குப்பையை போட்டு மூடி விட்டனர். சில நேரங்களில் மாதவிடாய் ரத்தம் இருக்கும். ஆனால் சுத்தம் செய்வதற்கு பதிலாக, ஒரு போர்வை அங்கு போடப்படும். ஏனெனில் முழுமையாக சுத்தம் செய்ய நேரமிருக்காது.
அதிர்ச்சி
பயணிகள் அனைவரும் உணவு உண்ணும் போது, ஒரு பெண் தனது குழந்தையின் டயப்பரை மாற்றத் தொடங்கினார். சிறிது நேரம் காத்திருக்கும்படி அவர்களுக்கு சைகை காட்டினேன். ஆனால் அந்த பெண் பிரச்சனை இல்லை, என் வேலை முடிந்தது, என்றார்.
ஆனால் அந்த டயப்பரை அந்த பெண் தனது இருக்கைக்கு அடியில் வைத்து விட்டு சென்றாள். சில நேரங்களில் பெற்றோர்கள் இருக்கை பாக்கெட்டில் அழுக்கு டயப்பர்களை கூட வைக்கிறார்கள். தங்களுடன் சக பயணிகள் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, இவ்வாறான விஷயங்களை அவர்கள் முற்றிலும் கைவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.