விமானத்தில் தான் காதல் - இத்தாலியரை கரம் பிடித்த கேரள பெண்!

Kerala Italy Marriage
By Sumathi Apr 17, 2023 04:24 AM GMT
Report

விமான பயணத்தில் பழகிய ஜோடி, காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் காதல்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட பட்டாம்பி பகுதியைச் சேர்ந்தவர் வீணா. கேரளாவில் பொறியியல் படித்த இவர், உயர் கல்விக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார்.

விமானத்தில் தான் காதல் - இத்தாலியரை கரம் பிடித்த கேரள பெண்! | Italian Young Man Held Hands With An Indian Girl

அப்போது அவர் பயணித்த விமானத்தில் அருகே இருந்த இருக்கையில் இத்தாலியைச் சேர்ந்த டேரியா என்ற இளைஞரும் பயணித்துள்ளார். அருகருகே இருந்ததால் இருவரும் பழகி நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. 2017ல் அறிமுகமாகி, 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் 

தொடர்ந்து, கடந்த ஆண்டு இருவரும் அமெரிக்காவில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர், இந்நிலையில், இருவரும் கேரளாவிற்கு வந்து வீணாவின் உறவுகள் முன்னிலையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

விமானத்தில் தான் காதல் - இத்தாலியரை கரம் பிடித்த கேரள பெண்! | Italian Young Man Held Hands With An Indian Girl

இதில் அந்த பெண்ணின் உறவினர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர், தவிர்க்க முடியாத காரணங்களால் டேரியாவின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.