4 வயது மூத்த சீரியல் நடிகையிடம் காதலில் விழுந்த பசங்க கிஷோர் - சீக்கிரமே டும்டும்!
நடிகர் கிஷோர் சீரியல் நடிகையான தனது காதலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நடிகர் கிஷோர்
பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க படம் மூலம் அறிமுகமானவர் கிஷோர். இப்படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து, கோலி சோடா, கோலி சோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், சகா, ஆறு அத்தியாயம், வஜ்ரம், நெடுஞ்சாலை, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். நடிகை, மாடல், மற்றும் தொகுப்பாளரான ப்ரீத்தி குமார்தான் அவர்.
காதலி இவர்தான்..
கிஷோரை விட 4வயது மூத்தவர். ப்ரீத்தி குமார் லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரன் நானும், மற்றும் வானத்தப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில், தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார் ப்ரீத்தி குமார்.

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கிஷோர், அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் அச்சோம்மா உன்னை திருமணம் செய்து கொள்ள காத்திருக்கிறேன், அடுத்த வருடம் நாம் நம் பிறந்த நாள் மற்றும் அனைத்து விசேஷங்களையும் கணவன் மனைவியாக கொண்டாடுவோம்...
லவ் யூ அச்சோம்மா... என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலாக நடிகை ப்ரீத்தி குமாரும் லவ் யூ அச்சோம்மா என்று பதிவிட்டிருந்தார்.
சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய வாகன பாதுகாப்பு நிலையத்தில் அதிகரித்த கட்டணம் அறவீடு: பக்தர்கள் விசனம் IBC Tamil
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..! IBC Tamil
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil