இதுக்காக தான் இவ்வளவும்... இது தான் என் பேராசை:நடிகர் பார்த்திபன்

Parthiban Only Kollywood A R Rahman
By Sumathi Jun 06, 2022 10:55 PM GMT
Report

சினிமாவின் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே வித்தியாசமான படங்களை எடுக்கிறேன் என்று இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ஆர்.பார்த்திபன்

இதுக்காக தான் இவ்வளவும்... இது தான் என் பேராசை:நடிகர் பார்த்திபன் | Parthibans Desire In The History Of Cinema

ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம், இரவின் நிழல். வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இரவின் நிழல்

இந்தப் படத்தின் வெளியீட்டு விழா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் முப்பதாண்டு இசை பயண கொண்டாட்ட விழா சென்னையில் நடந்தது.

இதுக்காக தான் இவ்வளவும்... இது தான் என் பேராசை:நடிகர் பார்த்திபன் | Parthibans Desire In The History Of Cinema

அதில் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன், கலைப்புலி தாணு, சரத்குமார், ராதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஏ.எல்.விஜய், மனோபாலா, தயாரிப்பாளர்கள் டி.சிவா, தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஆர்.பார்த்திபன், சினிமா எடுப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. பெரிய ஆர்வம் இருக்கு.

பொதுவாக, சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத விஷயத்தை செய்ய வேண்டும், அப்போதுதான் சினிமாவின் சரித்திரத்தில் நான் இடம்பெற முடியும் என்ற பேராசை இருக்கிறது.

இரவின் நிழல் ஒரு நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம். இந்தப் படம் பற்றி கர்வத்தோட சொல்றதுக்குப் பின்னால பெரிய உழைப்பு இருக்கு. அதுக்கு எனக்கு மிகப்பெரிய ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவு ஏ.ஆர்.ரஹ்மான் என்றார்.

#MeToo கொடுமைகளை புத்தமாக எழுதிய பாலிவுட் நடிகை - அதிர்ச்சி தகவல்கள்!