முன்னாள் கணவர் பார்த்திபனுக்காக 10 ஆண்டுகள் ஒதுங்கியிருந்த சீதா - குடும்பத்தை எதிர்த்து திருமணம்..!
தமிழ் திரையுலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதை பெற்று சாதனை படைத்தது.
1980 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை சீதா இவர் ஆண் பாவம்,குரு சிசியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதையடுத்து நடிகர் பார்த்திபனுடன் பல படங்களில் நடித்து வந்தார்.1990 ஆம் ஆண்டு நடிகை சீதா வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதையடுத்து சீதா நடிகர் சதீஷை 2010 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பின்னர் சதீஷையும் கடந்த 2016 ஆண்டு விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை சீதா பேசுகையில், ஒரு பெண் தனியாக வாழ்வது கடினம் அதனால் தான் 40 வயதில் திருமணம் செய்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.