அடுத்த ஆண்டே கூட மக்களவை தேர்தல் மீண்டும் வரலாம் - செல்வப்பெருந்தகை சூசகம்!
Tamil nadu
Ramanathapuram
K. Selvaperunthagai
By Swetha
மக்களவை தேர்தல் மீண்டும் அடுத்த ஆண்டே வரலாம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை
2025ம் ஆண்டு மக்களவை தேர்தல் மீண்டும் வரலாம் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதவது, "அடுத்த ஆண்டே மத்தியில் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
மக்களவை தேர்தல்
மத்திய பா.ஜ.க. ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. தற்போதைய ஆட்சி என்பது நீண்ட ஆயுள் கொண்ட ஆட்சியாக எங்களுக்கு தெரியவில்லை.
எனவே 2025-ல் நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம், அல்லது 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுடன் சேர்ந்தும் வரலாம்." என்று தெரிவித்துள்ளார்.