நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்ப அளித்த பதில் இதுதான்!

Tamil nadu BJP Kushboo
By Jiyath Mar 02, 2024 05:39 AM GMT
Report

கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்ப அளித்த பதில் இதுதான்! | Parliamentary Elections Will Bring Kushboo Bjp

இந்நிலையில் தமிழகத்தில் பாஜக களம் இறக்கப்போகும் வேட்பாளர்கள் பற்றி கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது. அதில் நடிகை குஷ்புவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

திமுகவின் கூட்டணி அவசரத்திற்கு அந்த ஆப்ஷன் தான் காரணம் - ஜெயக்குமார் பேட்டி!

திமுகவின் கூட்டணி அவசரத்திற்கு அந்த ஆப்ஷன் தான் காரணம் - ஜெயக்குமார் பேட்டி!

தேர்தலில் போட்டியா? 

மேலும், தென் சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து குஷ்பு கூறுகையில் "எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி பெயர் அடிபடுவது வழக்கமானதுதான். 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? நடிகை குஷ்ப அளித்த பதில் இதுதான்! | Parliamentary Elections Will Bring Kushboo Bjp

கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றார். முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி தலைமை உத்தரவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்திருந்தார்.