மக்களவை தேர்தல் ; விறுவிறுப்பான இரண்டாம் கட்ட வாக்குப்பத்திவு - எத்தனை சதவீதம்?
மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
மக்களவை தேர்தல்
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 102 தொகுதிகளின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நிறைவடைந்தது.
தொடர்ந்து, 2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
தேர்தலில் 1,098 ஆண்கள், 102 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,202 வேட்பாளர்கள் உள்ளனர். அதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்காளர்கள் பலரும் ஆர்வத்துடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பத்திவு
அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 11.1 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 25.1 சதவீதமும், 1 மணி நிலவரப்படி 40 சதவீதமும், 3 மணி நிலவரப்படி 50.03 சதவீதமும், 5 மண இந்த நிலையில், 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
இதையடுத்து,இரவு 7 மணி நிலவரப்படி 88 தொகுதிகளில் மொத்தம் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் ஏழாம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இணையத்தள பக்கத்தில், தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவால் எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஏமாற்றமே மிஞ்சும் என்று குறிப்பிட்டுள்ளார்.