2ம் கட்ட தேர்தல்; 13 மாநிலங்கள் - விஐபி வேட்பாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?
2-ம் கட்டமாக 13 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
மக்களவை தேர்தல்
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
தொடர்ந்து, 2-ம் கட்டமாக கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள்,
2-ம் கட்டம்
ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் 1,098 ஆண்கள், 102 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,202 வேட்பாளர்கள் உள்ளனர்.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆனி ராஜா போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் மீண்டும் களமிறங்கி உள்ள நிலையில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
விஐபி வேட்பாளர்கள்
ஆலப்புழா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரான கேசி வேணுகோபால் போட்டியிட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜகவின் மாநில துணை தலைவர் சேபா சுரேந்திரன் களமிறங்கி உள்ளார். பெங்களூர் தெற்கு தொகுதியில் பாஜக சிட்டிங் எம்பியான தேஜஸ்வி சூர்யா களமிறங்கி உள்ளார்.
புறநகர் தொகுதியில் கர்நாடகா காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் களமிறங்கி உள்ளார். மண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி போட்டியிடுகிறார்.
மைசூர்- குடகு தொகுதியில் மைசூர் மன்னர் வாரிசான யதுவீர் போட்டியிடுகிறார். உத்தரவ் பிரதேசத்தில் மதுரா தொகுதியில் சிட்டிங் எம்பியும், நடிகையுமான ஹேமமாலினி மீண்டும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மீரட் தொகுதியில் நடிகர் அருண் கோயல் பாஜக வேட்பாளராக உள்ளார்.
சத்தீஸ்கரில் ராஜ்நந்த்கான் தொகுதியில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் காங்கிரஸ் சார்பில் இறங்கியுள்ளார். ராஜஸ்தானில் லோக்சபா சபாநாயகரான ஓம்பிர்லா பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார்.