மீண்டும் ராகுல் காந்திக்கு கைகொடுக்குமா வயநாடு - 3 கட்சி தலைவர்களின் போட்டி??

Indian National Congress Rahul Gandhi Lok Sabha Election 2024
By Karthick Apr 26, 2024 12:15 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி

நேரு குடும்பத்தை சேர்ந்தவரான ராகுல் காந்தி, நாட்டில் மூத்த தலைவராக உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டார். அமேதி தொகுதி நேரு குடும்பத்தின் தொகுதியாகவே இருக்கின்றது.

wayanad-lok-sabha-election-a-look

சஞ்சய் காந்தி(1980) ராஜீவ் காந்தி (1981, 1984, 1989, 1991), சோனியா காந்தி (1999), ராகுல் காந்தி (2004,2009,2014) என வரிசையாக நேரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தொகுதியில் இருந்து வெற்றி வேட்பாளராக தேர்வாகியுள்ளனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் தோல்வியடைந்தாலும் ராகுல் காந்தி வயநாடு வரவேற்பை கொடுத்தது.

வயநாடு தொகுதி

மறுசீரமைப்பின் போது, கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதியே வயநாடு. 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு இருமுறையும் வெற்றிபெற்றுள்ளார் M.I.ஷானவாஸ்.

wayanad-lok-sabha-election-a-look

4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, இந்த முறை மீண்டும் வயநாடு தொகுதியையே தேர்வு செய்துள்ளார். அவருக்கு போட்டியாக இந்தியா கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆனி ராஜா, பாஜகவின் வேட்பாளராக சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

சேட்டன்கள் மண்ணில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? கேரளா மக்களவை தேர்தல் ஒரு பார்வை

விவசாயத்தை மையமாக கொண்டுள்ள இத்தொகுதியில் மானந்தவாடி(தனி), கல்பற்றா, திருவம்பாடி, எரநாடு, சுல்தான் பதேரி (தனி), வண்டூர் (தனி), நிலாம்பூர் போன்ற 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

கடும் போட்டி

வயநாடு கேரளாவின் அனைத்து பகுதிகளை போல தீவிர அரசியல் காலமாகவே உள்ளது. காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள், மத சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகள் செயலாற்றுகின்றன. இம்முறை வயநாட்டில் ராகுல் காந்திக்கு பெரும் சவால் உள்ளது.

wayanad-lok-sabha-election-a-look

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக உள்ளார் ஆனி ராஜா. அதே போல பாஜகவின் கேரளா மாநில தலைவராக உள்ளார் சுரேந்திரன். 3 கட்சிகளும் பலமான வேட்பாளரை இறங்கியுள்ளது கடும் போட்டிக்காகவே. தொகுதி உருவாகி 15 ஆண்டுகளாகியும் நாடாளுமன்றத்தில் வயநாடு மக்கள் பிரச்சனைக்காக குரல் எழுப்படவில்லை என குற்றம்சாட்டுகிறார் ஆனி ராஜா.

பிரச்சனை என்ன..?

அதே போல சுரேந்த்ரனும் இந்த தொகுதியில் இருக்கும் பின்னடைவைகளை சுட்டிக்காட்டுகிறார். தொகுதியில் மருத்துவ கல்லூரி - தொழிற்சாலைகள் போன்றவற்றை குறையாக முன்வைக்கின்றார். தொகுதியின் பெரிய குறையாக இருப்பதும் மருத்துவ கல்லூரி தான். அருகே அமைந்திருக்கும் மருத்துவ கல்லூரி என்றால் அது கோழிக்கோடு மருத்துவ கல்லூரியே.

wayanad-lok-sabha-election-a-look

சுமார் 70 கிலோமீட்டர் தூரம். இதனை தான் அங்குள்ள மக்களும் பெரும் குறையாக வைக்கிறார்கள். தொகுதியில் பெரும்பாலும் காபி, தேயிலை, தென்னை, நெல் போன்ற விவசாய தொழிலே நடக்கும் காரணத்தாலும், சமீப காலமாக காபி, மிளகு, பாக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் இங்குள்ள மக்கள் பெரிய குறை ஏதும் இல்லாமலே தென்படுகிறார்கள்.